Enable Javscript for better performance
சட்ட நகலை எரித்து வழக்குரைஞர்கள் போராட்டம்- Dinamani

சுடச்சுட

    

    வழக்குரைஞர்களுக்கான சட்டத் திருத்த மசோதாவை ரத்து செய்யக் கோரி கோவையில் வழக்குரைஞர்கள் சட்ட நகலை எரித்து வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு கோயம்புத்தூர் வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர் கே.எம்.தண்டபாணி தலைமை வகித்தார். இதில், வழக்குரைஞர்களின் அடிப்படை உரிமைகளைப் பாதிக்கும் வகையில் உள்ள புதிய சட்டத் திருத்த மாசோதாவை ரத்து செய்ய வேண்டும். தமிழக வழக்குரைஞர்கள் 25 பேர் மீது விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும். நீதிமன்றக் கட்டண உயர்வைத் திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்திப்பட்டன.
      இதில், சட்ட நகலை எரித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 600-க்கும் மேற்பட்ட வழக்குரைஞர்கள் கலந்து கொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai