Enable Javscript for better performance
சத்துணவுக் கூடத்தை சேதப்படுத்திய யானைகள்- Dinamani

சுடச்சுட

    

    வால்பாறையை அடுத்த ஷேக்கல்முடி எஸ்டேட் பகுதியில் உள்ள சத்துணவுக் கூடத்தை யானைகள் வியாழக்கிழமை இரவு சேதப்படுத்தியுள்ளன.
    கேரள மாநிலம் வனத்தின் எல்லைப் பகுதியான ஷேக்கல்முடி எஸ்டேட் பகுதியில் ஏராளமான யானைகள் உள்ளன. அவ்வப்போது இந்த யானைகள் எஸ்டேட் தொழிலாளர்களின் குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்து சேதத்தை ஏற்படுத்தி வருகின்றன.
    இந்நிலையில், ஷேக்கல்முடி எஸ்டேட் பகுதிக்கு வியாழக்கிழமை இரவு வந்த 6 யானைகள் அங்கு உள்ள அரசுத் தொடக்கப் பள்ளியின் சத்துணவுக் கூடம், வகுப்பறைக் கதவுகளை சேதப்படுத்தியுள்ளன.
    இதுகுறித்து தகவலறிந்த வனத் துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்று யானைகளை அங்கிருந்து வனப் பகுதிக்குள் விரட்டியுள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai