Enable Javscript for better performance
தனியார் கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்- Dinamani

சுடச்சுட

    

    மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் உள்ள தனியார் கல்லூரி மாணவர்கள் வெள்ளிக்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
    இக்கல்லூரியில் 250-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இங்குள்ள இரண்டு உதவிப் போராசிரியர்கள் மாணவ, மாணவிகளைத் தரக்குறைவாகப் பேசி வருவதாகக் கூறப்படுகிறது.
    இதுகுறித்து, கல்லூரித் தாளாளரிடம் பலமுறை தெரிவித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
    இந்நிலையில், சம்பந்தப்பட்ட உதவிப் பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்லூரி வளாகத்துக்குள் அமர்ந்து தர்னாவில் ஈடுபட்டனர்.
    அவர்களிடம் துடியலூர் காவல் ஆய்வாளர் வெற்றிவேந்தன், கல்லூரி நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், அதில் உடன்பாடு ஏற்படாததால் மாணவர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai