Enable Javscript for better performance
பொள்ளாச்சியில் ரயில் மறியல்: 28 பேர் கைது- Dinamani

சுடச்சுட

    

    கோவையிலிருந்து பாலக்காடு வழியாக ராமேசுவரத்துக்கு இயக்கப்பட்ட சிறப்பு ரயிலை பெரியார் திராவிடர் கழகத்தினர், திமுகவினர் வெள்ளிக்கிழமை மறித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
     கோவையிலிருந்து பாலக்காடு வழியாக ராமேசுவரத்துக்கு கோடைக் கால சிறப்பு ரயில் வாரம் ஒரு முறை இயக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, முதல் முறையாக சிறப்பு ரயில் வெள்ளிக்கிழமை இயக்கப்பட்டது.
     இந்த சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் வெள்ளிக்கிழமை காலை 10.50 மணிக்கு பொள்ளாச்சி ரயில் நிலையத்தை வந்தடைந்தது. இந்த ரயிலை பெரியார் திராவிடர் கழக ஒருங்கிணைப்பாளர் நாகராசன், திமுக நகரச் செயலாளர் தென்றல் செல்வராஜ், நேதாஜி பேரவைத் தலைவர் வெள்ளை நடராஜ், தென்னைத் தொழிலாளர் பேரவைத் தலைவர் கருப்புசாமி ஆகியோர் தலைமையில் மறித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட 28 பேரை பொள்ளாச்சி மேற்கு காவல் துறையினர் கைது செய்தனர்.
     போராட்டம் குறித்து, பெரியார் திராவிடர் கழக ஒருங்கிணைப்பாளர் நாகராசன் கூறியதாவது:
     கோவையில் இருந்து பாலக்காடு வழியாக ராமேசுவரத்துக்கு இயக்கும் சிறப்பு ரயிலை கோவையிலிருந்து போத்தனூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி வழியாக இயக்க வேண்டும். பாலக்காடு கோட்டத்தில் உள்ள பொள்ளாச்சி, கிணத்துக்கடவு பகுதிகளை சேலம் கோட்டத்துடன் இணைக்க வேண்டும் என வலியுறுத்தியே நாங்கள் போராட்டத்தில் ஈடுபட்டோம்.
     இந்தக் கோரிக்கையை ரயில்வே நிர்வாகம் நிறைவேற்றாவிட்டால் தொடர்ந்து போராட்டம் நடத்தப்படும் என்றார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai