Enable Javscript for better performance
மதுக் கடைக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆதிவாசிகள் ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    மதுக் கடைக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆதிவாசிகள் ஆர்ப்பாட்டம்

    By DIN  |   Published on : 22nd April 2017 07:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தங்கள் பகுதியில் மதுக் கடையைத் திறக்க கூடாது என வலியுறுத்தி ஆதிவாசிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
     காரமடையை அடுத்த தோலம்பாளையம் ஊராட்சிப் பகுதியில் சீங்குழி, காலனிபுதூர், குழியூர் பட்டிசாலை, மேல்பாவி உள்பட 20-க்கும் மேற்பட்ட ஆதிவாசி கிராமங்கள் உள்ளன. தோலம்பாளையத்தை அடுத்த பட்டிசாலை சோதனைச் சாவடி அருகே புதிதாக மதுக் கடை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
     இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆதிவாசி மக்கள் கடந்த 3 நாள்களாக தண்டோரா அடித்து கிராம மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தனர். இந்நிலையில், பட்டிசாலை பகுதியில் கட்டப்பட்ட மதுக் கடை முன்பு அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
     இப்பகுதியில் மதுக் கடை அமைத்தால், ஆதிவாசிகள் பாதிக்கப்படுவர். மேலும், மது அருந்துவோர் வீசிச்செல்லும் காலி பாட்டில்கள், பிளாஸ்டிக் பொருள்களால் சுற்றுச்சூழலும், வன விலங்குகளும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது என்றனர்.
    வால்பாறையில் மதுக் கடைக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் 63 பேர் கைது: வால்பாறையில் நகரில் செயல்பட்டு வந்த நான்கு மதுக் கடைகளும் மூடப்பட்டுள்ளன. தற்போது வால்பாறையை அடுத்த சோலையாறு அணைப் பகுதியில் மட்டும் மதுக் கடை உள்ளது.
     இந்த மதுக் கடையையும் மூட வலியுறுத்தி பாஜகவினர் அந்தக் கடை முன்பாக வெள்ளிக்கிழமை ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். பாஜக மண்டல மகளிரணிச் செயலாளர் மா.மாரிச்செல்வி தலைமையிலும், ஒன்றியப் பொதுச் செயலாளர் கே.ஆர்.கார்த்திக் முன்னிலையிலும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    இதில் பங்கேற்ற 63 பேரை போலீஸார் கைது செய்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai