Enable Javscript for better performance
மாயமான சிறுமியை மீட்க தனிப்படை அமைப்பு- Dinamani

சுடச்சுட

    

    அன்னூர் அருகே கஞ்சப்பள்ளிப் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி 2016-இல் மாயமான விவகாரத்தில், உயர் நீதிமன்ற உத்தரவின்படி, அச்சிறுமியை மீட்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
     கஞ்சப்பள்ளி, பனங்காட்டூர் கைகாலன்சிறைத் தோட்டத்தைச் சேர்ந்தவர் முருகேசன். இவரது மகள் கோகிலா (13), 8-ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், இவரை 2016 அக்டோபரில் மர்ம நபர் கடத்திச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து அன்னூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
      இந்நிலையில், முருகேசன் உயர் நீதிமன்றத்தில் ஆள்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார். இதையடுத்து உயர் நீதிமன்றம், ஒரு மாதத்துக்குள் அச்சிறுமியை மீட்க வேண்டும் எனக் கால அவகாசம் வழங்கியிருந்தது. இருப்பினும் காவல் துறையால் அச்சிறுமியை மீட்க முடியவில்லை. இந்நிலையில், உயர் நீதிமன்றம் மீண்டும் ஒரு மாதம் கால அவகாசம் வழங்கியுள்ளது. இந்த அவகாசத்துக்குள் சிறுமியை மீட்காவிட்டால், காவல் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
     இதைடுத்து, அந்தச் சிறுமியை மீட்பதற்காக கருமத்தம்பட்டி டி.எஸ்.பி. ஜெயசந்திரன் தலைமையில், அன்னூர் ஆய்வாளர் சரவணன், கருமத்தம்பட்டி ஆய்வாளர் சேகரன் ஆகியோர் மேற்பார்வையில் 5 உதவி ஆய்வாளர்கள் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படையினர், சிறுமியைத் தேடி பல்வேறு மாவட்டங்களிலும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai