Enable Javscript for better performance
" உணவுப் பரிசோதனை கூடங்களை மேம்படுத்த ரூ. 500 கோடி ஒதுக்கீடு'- Dinamani

சுடச்சுட

    

    " உணவுப் பரிசோதனை கூடங்களை மேம்படுத்த ரூ. 500 கோடி ஒதுக்கீடு'

    By DIN  |   Published on : 22nd April 2017 07:25 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாடு முழுவதும் உள்ள உணவுப் பரிசோதனைக் கூடங்களை மேம்படுத்த மத்திய அரசு ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாட்டுத் துறை முதன்மைச் செயல் அலுவலர் பவன்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார்.
     கோவையில், உணவுப் பாதுகாப்புத் துறையில் உள்ள புதிய சட்ட முறைகள் குறித்து ஹோட்டல் உரிமையாளர்கள், வணிக நிறுவனங்கள் ஆகியோருக்கு இடையேயான கலந்துரையாடல் கூட்டம் மற்றும் வாடிக்கையாளர் சந்திப்புக் கூட்டம் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாட்டுத் துறை முதன்மைச் செயல் அலுவலர் பவன்குமார் அகர்வால் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
      அதன்பின்னர், அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
     நாடு முழுவதும் உள்ள உணவுப் பரிசோதனைக் கூடங்களை மேம்படுத்த ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில், தமிழகத்தில் செயல்பட்டு வரும் இரண்டு பரிசோதனைக் கூடங்களும் மேம்படுத்தப்படவுள்ளன. மேலும், தனியாரிடம் உள்ள 124 உணவுப் பரிசோதனை மையங்களையும் பயன்படுத்திக்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
    உணவுப் பாதுகாப்புச் சட்டம் குறித்து உற்பத்தியாளர்கள் மற்றும் பொதுமக்களிடம் உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றார்.
     முன்னதாக நடைபெற்ற கூட்டத்தில் தமிழக உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை ஆணையர் அமுதா, ஆட்சியர் த.ந.ஹரிஹரன், மாநகராட்சி ஆணையர் டாக்டர் விஜயகார்த்திகேயன், தமிழ்நாடு ஹோட்டல் உரிமையாளர் சங்கத் தலைவர் வெங்கட சுப்பு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai