Enable Javscript for better performance
2-ஆவது நாளாக அரசு மருத்துவர்கள் போராட்டம்- Dinamani

சுடச்சுட

    

    மருத்துவ மேற்படிப்பில், அரசு மருத்துவர்களுக்கு அளிக்கப்பட்டு வந்த 50 சதவீத இடஒதுக்கீட்டை ரத்து செய்ததைக் கண்டித்து கோவையில், அரசு மருத்துவர்கள் 2-ஆவது நாளாக பணிகளைப் புறக்கணித்து வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
      தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்.டி., எம்.எஸ். உள்ளிட்ட மருத்துவ மேற்படிப்புச் சேர்க்கையில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்பட்டு வந்தது. தற்போது இந்த இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டுள்ளது.  இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, கோவை மாவட்ட அரசு மருத்துவர்கள் சங்கத் தலைவர் ரவிசங்கர் தலைமையில் மருத்துவர்கள் வியாழக்கிழமை இரண்டு மணி நேரம் பணிகளைப் புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமை காலை 8 மணி முதல் பகல் 1 மணி வரையில் பணிகளைப் புறக்கணித்து மருத்துவமனை வளாகத்தில் போராட்டம் நடத்தினர்.
     இதில், மருத்துவர்கள், பயிற்சி மருத்துவர்கள், மருத்துவ மாணவர்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதனால், சிகிச்சை பெற வந்த வெளிநோயாளிகள், உள்நோயாளிகள்
    பாதிக்கப்பட்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai