Enable Javscript for better performance
புத்தக வாசிப்பு சிறந்த சமுதாயத்தை உருவாக்கும்: ஓம் சக்தி இதழின் இணையாசிரியர் பெ.சிதம்பரநாதன்- Dinamani

சுடச்சுட

    

    புத்தக வாசிப்பு சிறந்த சமுதாயத்தை உருவாக்கும்: ஓம் சக்தி இதழின் இணையாசிரியர் பெ.சிதம்பரநாதன்

    By DIN  |   Published on : 23rd April 2017 05:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புத்தக வாசிப்பு சிறந்த சமுதாயத்தை உருவாக்கும் என்று ஓம் சக்தி இதழின் இணையாசிரியரும், கவிஞருமான பெ.சிதம்பரநாதன் கூறினார்.
    உலகப் புத்தகத் தினத்தையொட்டி, தமிழ்நாடு அரசுப் பொது நூலகத் துறை, நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் ஆகியவற்றின் சார்பில் ஆர்.எஸ்.புரம் மாவட்ட மைய நூலகத்தில் சிறப்பு புத்தக கண்காட்சி நடைபெறுகிறது. கண்காட்சியின் தொடக்க விழா சனிக்கிழமை நடைபெற்றது. கண்காட்சியைத் தொடங்கி வைத்து சிதம்பரநாதன் பேசியதாவது:
    புத்தகங்கள் மிகவும் வீரியமானவை. பல்கலைக்கழகங்களைக் காட்டிலும் நூலகங்கள் மேலானவை. சுதந்திரத்துக்காகப் போராடி தூக்கு மேடை ஏறிய பகத்சிங், தூக்கிலிடப்படுவதற்கு சற்று முன்பு வரையிலும் புத்தகம் படித்துக் கொண்டிருந்தார்.
    அதேபோல், மேற்கு வங்க முன்னாள் முதல்வர் மறைந்த ஜோதிபாசு, இறக்கும் நிலையில் தனது உடலைப் புதைக்க வேண்டாம். மாறாக அதை மருத்துவக் கல்லூரிக்கு தானமாக வழங்கிவிடுங்கள். மாணவர்கள் எனது உடலை வைத்து பாடம் படித்துக் கொள்ளட்டும் என்றார். வாசிப்பின் அருமையை தலைவர்கள் பலர் உணர்த்திச் சென்றுள்ளனர். சிறந்த, ஒழுக்கமான சமுதாயம் உருவாக புத்தகங்களே வழிகாட்டும் என்றார்.
    நிகழ்ச்சியில், இந்திய கலாசார நட்புறவுக் கழகத்தின் மாநிலச் செயலர் வெ.சுப்பிரமணியன், புலவர் செந்தலை ந.கெளதமன், மாவட்ட நூலக அலுவலர் ஜே.கார்த்திகேயன், இருப்பு சரிபார்ப்பு அலுவலர் வ.கற்பகவிநாயகம், மாவட்ட மைய நூலகர் பே.ராஜேந்திரன், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற மாவட்டச் செயலர் ப.பா.ரமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
    ஏப்ரல் 29-ஆம் தேதி வரை இந்தக் கண்காட்சி நடைபெறுகிறது. இதில், நூல்களுக்கு 10 முதல் 50 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுவதாக கண்காட்சி அமைப்பாளர்கள் தெரிவித்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai