Enable Javscript for better performance
ராமானுஜரின் ஆயிரமாவது ஆண்டு ஜயந்தி தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    பெரியநாயக்கன்பாளையம் குப்பிச்சிபாளையம் சாலையில் உள்ள ஸ்ரீ உபகலையார் ராமானுஜர் கூடத்தில் எம்பெருமானார் தர்சன ஐக்கிய சபா சார்பில் பகவத் ராமானுஜரின் 1,000-ஆவது ஜயந்தி சனிக்கிழமை தொடங்கியது.
    பத்து நாள்கள் நடைபெறும் இந்த விழாவில், சனிக்கிழமை அதிகாலை திருப்பள்ளி எழுச்சிக்குப் பின்னர், ராமானூஜருக்கு சிறப்பு ஆராதனைகள் நடத்தப்பட்டன. பின்னர், கொடியேற்ற வைபவம் தொடங்கியது.
    ராமானுஜர் கூடத்தின் நிர்வாகிகள் பி.ஆர்.கோவிந்தராஜுலு நாயுடு, பாலசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூடத்தின் தலைவர் கோவிந்தராஜ் தலைமை வகித்து வைணவத் திருக்கொடியை ஏற்றி வைத்தார்.
    தொடர்ந்து, மங்களகிரி வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் ராமானுஜர் கணபதியைச் சேர்ந்த பாக்கியநாத சுவாமிகள் குழுவினரின் நாமசங்கீர்த்தனத்துடன் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு சேவை சாதித்தார். இதையடுத்து, நாலாயிரத் திவ்யப் பிரபந்த சாற்றுமுறை நடந்தது. இதில், கரிவரதராஜப் பெருமாள் கோயிலைச் சேர்ந்த ஆழ்வார், ஆண்டாள் கோஷ்டியினர் பிரபந்தப் பாடல்களைப் பாடினர். இதன் பின்னர் மாலையில் குழந்தைகள் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
    இதைத் தொடர்ந்து, நாள்தோறும் சூரியப் பிரபை, சந்திரப் பிரபை, தோளுக்கு இனியான், சேஷ வாகனம், பல்லக்கு சேவை, சாதா சப்பரம், அலங்கார சப்பரம், ஆச்சாரிய விமானத்தில் புறப்பாடு, புஷ்பப் பல்லக்கு ஆகிய சிறப்பு அலங்காரங்களில் திருவீதி உலா நடைபெறுகிறது. ராமானுஜரின் திருநட்சத்திர திருநாளான மே 1-இல் கந்தப்பொடி உற்சவம், நெய்தீப ஊர்வலத்துடன் விழா நிறைவுறுகிறது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai