Enable Javscript for better performance
ஆலயங்களில் கட்டண தரிசனத்தை ரத்து செய்ய கோரிக்கை- Dinamani

சுடச்சுட

    

    தமிழகத்தில் உள்ள ஆலயங்களில் கட்டண தரிசனத்தை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் என விஸ்வ ஹிந்து பரிஷத் வலியுறுத்தியுள்ளது.
    கோவை, சிங்காநல்லூரில் உள்ள தேவர் தோட்டத்தில் மாநகர மாவட்ட விஷ்வ ஹிந்து பரிஷத்தின் ஊழியர் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மாநிலத் தலைவர் ஆர்.எஸ்.நாராயணசாமி பேசினார்.
    கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்:
    தமிழகத்தில் உள்ள அணை, குளங்கள், ஆறுகளை போர்க்கால அடிப்படையில் தமிழக அரசு தூர்வார வேண்டும். ஆறுகளின் குறுக்கே ஆங்காங்கே தடுப்பணைகள் அமைக்க வேண்டும். கோவை இந்து முன்னணி நிர்வாகி சசிகுமார் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும்.
    விவசாயிகள் நலன் கருதி அவர்கள் கோரிய வறட்சி நிவாரண நிதியை வழங்க வேண்டும். ஆலயங்களில் கட்டண தரிசன முறையை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் மாவட்டச் செயலாளர் கனகராஜ், வழக்குரைஞர் விஜயகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
    இதில், மாவட்ட அமைப்பாளராக நாராயணன், தலைவராக குமரேசன், துணைத் தலைவர்களாக சசிகுமார், மாணிக்கம், ஆனந்தன், செல்வராஜ், செயலாளர் விஜயகுமார், பொருளாளராக கிருஷ்ணகுமார் உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai