Enable Javscript for better performance
கரிச்சிபாளையத்தில் வேப்ப மரம் மறுநடவு- Dinamani

சுடச்சுட

    

    கோவை மாவட்டம், அன்னூரை அடுத்த கரிச்சிபாளையத்தில் மின் கம்பத்தின் கீழ் இருந்த வேப்ப மரம் வேருடன் பிடுங்கி மாற்று இடத்தில் ஞாயிற்றுக்கிழமை நடப்பட்டது.
    மோப்பிரிபாளையம் பேரூராட்சிக்கு உள்பட்ட கரிச்சிபாளையத்தில் மின் கம்பத்தின்கீழ், சுமார் 15 ஆண்டுகளான வேப்ப மரம் இருந்தது. அந்த மரத்தை அங்கிருந்து பிடுங்கி வேறு இடத்தில் நட்டுப் பராமரிக்க அப்பகுதி இளைஞர்கள் முடிவு செய்தனர். இதையடுத்து, பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன் அந்த மரம் வேருடன் பிடுங்கி, கரிச்சிபாளையம் மாரியம்மன் கோயில் வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடப்பட்டது.
    இந்தப் பகுதி இளைஞர்கள் பல்வேறு இடங்களில் மரக் கன்றுகள் நட்டு வைத்து பராமரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai