Enable Javscript for better performance
கள்ளச் சந்தையில் மது விற்பனை அதிகரிப்பு: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி குற்றச்சாட்டு- Dinamani

சுடச்சுட

    

    கள்ளச் சந்தையில் மது விற்பனை அதிகரிப்பு: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி குற்றச்சாட்டு

    By DIN  |   Published on : 24th April 2017 08:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோவையில் சில இடங்களில் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ள நிலையில், பல இடங்களில் கள்ளச்சந்தையில் மது விற்பனை செய்யப்படுவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.
    இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கிழக்கு மண்டல முதல் மாநாடு பாலன் நகரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாநாட்டுக்கு கிழக்கு மண்டல செயற்குழு உறுப்பினர் ஜி.நாராயணசாமி தலைமை தாங்கினார்.
    இதில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் துணைச் செயலர் கே.சுப்பராயன், மாநிலப் பொருளாளர் எம்.ஆறுமுகம், மாவட்டச் செயலர் வி.எஸ்.சுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
    மாநாட்டில், விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து 25-ஆம் தேதி நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்தில் முழுமையாக பங்கெடுப்பது, நீதிமன்ற உத்தரவால் சில இடங்களில் மதுக்கடைகள் அடைக்கப்பட்டிருந்தாலும் மாநகரில் பல இடங்களில் கள்ளச்சந்தையில் மது விற்பனை அதிகரித்துள்ளது. குறிப்பாக சிங்காநல்லூர் பேருந்து நிலையம் அருகில் மூடப்பட்ட டாஸ்மாக் கடை அருகிலேயே அட்டைப் பெட்டிகள் வைத்து இரவு பகலாக, கூடுதல் விலைக்கு மது விற்பனை நடைபெறுகிறது. இவ்வாறு மது விற்பனை செய்பவர்கள் மீது போலீஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    சிங்காநல்லூர் பேருந்து நிலையம் பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக ஆம்னி பேருந்துகள் நிறுத்தப்படுவதைத் தடுக்க வேண்டும், நலவாரியத்தில் பதிவு செய்துள்ள அனைத்து அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கும் இ.எஸ்.ஐ. மருத்துவ வசதி செய்து கொடுக்க வேண்டும், எஸ்.ஐ.எஸ்.ஹெச். காலனி., பீளமேடு ரயில்வே மேம்பாலப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
    மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர் கே.எம்.செல்வராஜ், கோவை மாநகரம் கிழக்கு மண்டலச் செயலர் எஸ்.சண்முகம், வேணுகோபால் உள்ளிட்ட பலர் மாநாட்டில் கலந்து கொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai