Enable Javscript for better performance
புற்றுநோய் சிகிச்சைக்கு பிறகும் கருவுற முடியும்: மருத்துவர் மீனாட்சி தகவல்- Dinamani

சுடச்சுட

    

    புற்றுநோய் சிகிச்சைக்கு பிறகும் கருவுற முடியும்: மருத்துவர் மீனாட்சி தகவல்

    By DIN  |   Published on : 24th April 2017 08:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதற்கான சிகிச்சை பெற்ற பிறகும் கருவுற முடியும் என்று, நோவா ஐவிஐ கருத்தரித்தல் மைய டாக்டர் மீனாட்சி தெரிவித்துள்ளார்.
     இதுகுறித்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
     பொதுவாக புற்றுநோய்க்கான சிகிச்சையால் கருப்பையின் சினைத்திறன் குறைந்து கருவுறும் திறனை பெண்கள் இழப்பார்கள். இதற்கு கருப் பாதுகாப்பு மருத்துவ தொழில்நுட்பங்கள் மூலம் சிகிச்சை அளிக்க முடியும்.
     கருப் பாதுகாப்பு என்பது, ஒருவர் கருவுறுதலையோ அல்லது கருவுறும் ஆற்றலையோ பாதுகாக்க உதவும் முயற்சியாகும். புற்றுநோய், விந்தகம், கருப்பை ஆகியவை தவிர கருவுறுதலை நேரடியாகப் பாதிக்காது. அதே நேரத்தில் புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகள் கருப்பை, கருக் குழாய்கள், கருவுறும் உறுப்பு ஆகியவற்றை பாதித்துவிடும். அதனால், குழந்தை பிறக்கும் வாய்ப்பு குறைந்து விடும்.
     சில பெண்களுக்கு கீமோதெரபி, ரேடியோ தெரபி சிகிச்சைகள் முடிந்தவுடன், மாதவிடாய் முழுமையாக நின்றுவிடும். மற்றவர்களுக்கு சிகிச்சை முடிந்த பிறகு மாதவிடாய் சீராகிவிடும்.
     அவர்களது கருச் சினை முட்டைகள் இருப்பு கணிசமாகவும் ஆரோக்கியமாகவும் இருந்தால், வழக்கமான முறையில் குழந்தை பிரசவிக்கலாம். ஆண்களுக்கு கீமோதெரபி, ரேடியோ தெரபி சிகிச்சைக்குப் பிறகு விந்தணுக்களின் எண்ணிக்கை, வேகத்தன்மை, உருவமைப்பு, டிஎன்ஏ ஒருங்கிணைப்பு ஆகியவற்றில் பாதிப்பு நேரலாம்.  கீமோதெரபி, ரேடியோதெரபி ஆகிய சிகிச்சைகள் உடலை பாதிக்கும் அணுக்களுக்கு எதிராகச் செயல்படுகின்றன. இதன்மூலம் புற்றுநோய் அணுக்கள் உருவாவது, பரவுவது, பாதிப்பது ஆகியவற்றைப் பெரிதும் கட்டுப்படுத்துகின்றன. அதே சமயம் சாதாரண அணுக்களுக்கும் இந்த சிகிச்சை முறையால் பாதிப்பு ஏற்படும்.
     இதற்கு தீர்வாக, பிள்ளைபெறும் வயதில் உள்ள ஆண்களும் பெண்களும் புற்றுநோய் கண்டறியப்பட்ட பிறகு, சினை முட்டை, விந்தணு ஆகியவற்றை சேகரித்து உறைநிலையில் வைத்திருக்கும் நுட்பத்தைக் கடைப்பிடிக்கலாம்.
     அவர்களுக்கு புற்றுநோய் சிகிச்சை முழுமையாக முடிந்த பிறகு, உறையவைத்துப் பாதசுதுகாத்த சினை முட்டைகள், விந்தணுக்களின் உதவியுடன் கருத்தரிக்க முடியும் என்றார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai