Enable Javscript for better performance
ரூ. 19 கோடி மதிப்பிலான மாநகராட்சி நிலம் மீட்பு- Dinamani

சுடச்சுட

    

    கோவையில் ஆக்கிரமிக்கப்பட்ட சுமார் ரூ. 19.73 கோடி மதிப்பிலான 1.69 ஏக்கர் நிலங்களை மாநகராட்சி அதிகாரிகள் சனிக்கிழமை மீட்டனர்.
    இதுகுறித்து கோவை மாநகராட்சி ஆணையர் கே.விஜயகார்த்திகேயன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
    கோவை மாநகராட்சிப் பகுதிகளில் ஆக்கிரமிக்கப்பட்ட பொது ஒதுக்கீட்டு இடங்களைக் கண்டறிந்து மீட்கத் தேவையான நடவடிக்கைகளை மாநகராட்சி அதிகாரிகள் எடுத்து வருகின்றனர்.
    இதில், கடந்த மார்ச் மாதத்தில் கோவை மாநகராட்சிக்கு உள்பட்ட 5 மண்டலங்களில் சுமார் ரூ. 50.38 கோடி மதிப்பிலான 6 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டது. இந்நிலையில், கோவை கிழக்கு மண்டலம், செளரிபாளையம், வார்டு எண் 66-இல், உடையம்பாளையம் சாலையில் சுமார் ரூ. 5.8 கோடி மதிப்பிலான 29.34 சென்ட் நிலம்,  மேற்கு மண்டலம்,  வீரகேரளம், வார்டு எண் 19-இல் குறிச்சி நகரில் சுமார் ரூ. 2.5 கோடி மதிப்பிலான 26 சென்ட் நிலம், வடக்கு மண்டலம், துடியலூர் வார்டு எண் 3 சத்யா நகரில் பொது ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்தை ஆக்கிரமிக்கப்பட்ட சுமார் ரூ. 2.5 கோடி மதிப்பிலான 30 சென்ட் அளவிலான நிலம் மீட்கப்பட்டது.
    தெற்கு மண்டலம், குறிஞ்சி, வார்டு எண் 94-இல் சுமார் ரூ. 1.4 கோடி மதிப்பிலான 12 சென்ட் நிலம், மத்திய மண்டலம், ராமநாதபுரம் வார்டு எண் 74-இல் சுமார் ரூ. 5.03 கோடி மதிப்பிலான 46.26 சென்ட் நிலம் என மொத்தம்  ரூ. 19.73 கோடி மதிப்பிலான 1.69 ஏக்கர் நிலம் சனிக்கிழமை மீட்கப்பட்டுள்ளது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai