விமானப் படை நிர்வாகவியல் கல்லூரிக்கு "ஏ' தரச் சான்று
By DIN | Published on : 24th April 2017 08:24 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
கோவையில் உள்ள விமானப் படை நிர்வாகவியல் கல்லூரிக்கு தேசியத் தர மதிப்பீட்டு (நாக்) குழுவால் "ஏ' தரச் சான்று வழங்கப்பட்டுள்ளது.
இந்திய விமானப் படையில் உள்ள அதிகாரிகளுக்கான பயிற்சி நிறுவனங்களில் ஒன்றாக கோவையில் உள்ள விமானப் படை நிர்வாகவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது.
இதில், விமானப் படையின் தொழில் சார்ந்த பாடத் திட்டங்கள் மூலம் அதிகாரிகளுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. கல்லூரியில் வானிலை குறித்த பயிற்சி அளிக்கப்படுகிறது. இக்கல்லூரியில் தேசிய தர மதிப்பீட்டுக் குழுவினர் அண்மையில் ஆய்வு நடத்தினர். இந்த ஆய்வைத் தொடர்ந்து, விமானப் படை நிர்வாகவியல் கல்லூரிக்கு தேசிய தர மதிப்பீட்டுக் குழுவினரால் "ஏ' தரச் சான்று வழங்கப்பட்டுள்ளது.
இதில், தனிச் சிறப்பான பயிற்சி முறைகளுக்காக இக்கல்லூரிக்கு தேசிய தரச் சான்று வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.