Enable Javscript for better performance
உள்ளாட்சித் தேர்தலை நடத்தக் கோரி ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை உடனடியாக நடத்தக் கோரி ராஜீவ்காந்தி பஞ்சாயத்து ராஜ் சங்கம் சார்பில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, காங்கிரஸ் கட்சியின் மாநகர் மாவட்டத் தலைவர் வி.எம்.சி.மனோகரன், புறநகர் மாவட்டத் தலைவர் மகேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
    மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியால் கொண்டுவரப்பட்ட பஞ்சாயத்து ராஜ் சட்டத்தை முழுமையாக செயல்படுத்தி உள்ளாட்சி அமைப்புகளுக்கு முழுமையான அதிகாரம் அளிக்க வேண்டும். உள்ளாட்சித் தேர்தலை நடத்த மறுக்கும் தமிழக அரசும், மாநில தேர்தல் ஆணையத்தின் செயல்பாடும் கண்டிக்கத்தக்கது என வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai