Enable Javscript for better performance
கட்டுமானப் பொறியாளர் சங்க புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு- Dinamani

சுடச்சுட

    

    கட்டுமானப் பொறியாளர் சங்க புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு

    By DIN  |   Published on : 25th April 2017 07:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோவை கட்டுமானப் பொறியாளர் சங்கத்தின் (கொசினா) 10-ஆம் ஆண்டு விழா கூட்டம், புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா ஆகியவை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன.
    ஆண்டு விழாக் கூட்டத் தலைவர் என்.குருவாயூரப்பன், 2016-17 ஆம் ஆண்டுக்கான தலைவர் ஆர்.சரவணராஜா ஆகியோர் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தனர். சிறப்பு அழைப்பாளராக ஆர்.எஸ்.பிரபு கலந்து கொண்டு, சங்க செயல்பாடுகள் குறித்த புத்தகத்தை வெளியிட்டார்.
    தமிழ்நாடு, புதுவை அனைத்து கட்டுமானப் பொறியாளர் சங்க கூட்டமைப்புத் தலைவர் டி.ராகவன், 2017-18 ஆம் ஆண்டுக்கான நிர்வாகிகளுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்து வாழ்த்துரை வழங்கினார். இதையடுத்து புதிய தலைவராக ஆர்.கார்த்திக், செயலர் ஜே.விஜயகுமார், பொருளாளர் பி.ராஜரத்தினம் உள்ளிட்டோர் பதவி ஏற்றுக் கொண்டனர். மாநிலக் கூட்டமைப்பின் தலைவர் பொறுப்புக்கு தேர்வு செய்யப்பட்ட சி.தில்லைராஜன், மாநில கூட்டமைப்பு துணைத் தலைவர் எம்.சையத் ஜாகீர், ரவி ஆனந்த், கே.ராகவன், செயலர் கே.பி.செவ்வேள், பொருளாளர் டி.தங்கவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai