Enable Javscript for better performance
குழந்தைகள் காப்பகத்தை சேதப்படுத்திய யானைகள்- Dinamani

சுடச்சுட

    

    வால்பாறை எஸ்டேட் குடியிருப்பு பகுதிக்குள் ஞாயிற்றுக்கிழமை இரவு நுழைந்த யானைகள், அங்கிருந்த அரசுப் பள்ளி, குழந்தைகள் காப்பகம் ஆகியவற்றை தாக்கி சேதப்படுத்தின.
    வால்பாறையை அடுத்த குரங்குமுடி எஸ்டேட் பகுதிக்குள் 5 யானைகள் ஞாயிற்றுக்கிழமை இரவு நுழைந்தன. பின்னர் அந்த யானைகள், அங்குள்ள அரசு தொடக்கப் பள்ளி வளாகத்தை சேதப்படுத்தின. இதையடுத்து அருகில் உள்ள குழந்தைகள் காப்பகத்தின் கதவை தாக்கி சேதப்படுத்தின. பின்பு தொழிலாளர் குடியிருப்புக்குள் செல்ல முயன்ற யானைகளை பொதுமக்களும், வனத் துறையினர் போராடி அப்பகுதியை விட்டு திங்கள்கிழமை அதிகாலை விரட்டியுள்ளனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai