Enable Javscript for better performance
சர்தார் வல்லபபாய் படேல் கல்லூரிக்கு விடுமுறை- Dinamani

சுடச்சுட

    

    கோவை சர்தார் வல்லபபாய் படேல் ஜவுளி மேலாண்மை கல்லூரி மாணவ-மாணவிகளின் போராட்டம் நடத்தி வந்த நிலையில், திங்கள்கிழமை முதல் கல்லூரிக்கு  விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
      ஆய்வகங்கள், அனுபவம் மிகுந்த பேராசிரியர்கள், அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி, கோவை பீளமேடு பகுதியில் உள்ள சர்தார் வல்லபபாய் படேல் கல்லூரி மாணவர்கள் கடந்த மார்ச் 28-ஆம் தேதி காலவரையற்ற போராட்டத்தைத் தொடங்கினர்.
    இவர்களுடன் கல்வி நிறுவன முதல்வர், இயக்குநர் உள்ளிட்டோர் நடத்திய பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிவடைந்தன. மத்திய ஜவுளித் துறை இயக்குநர் எஸ்.ஆர்.கெய்க்வாட், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையிலும் தீர்வு எட்டப்படவில்லை.
    இந்த நிலையில், கடந்த சில நாள்களாக உள்ளிருப்புப் போராட்டத்தைத் தொடர்ந்த மாணவர்கள், ஞாயிற்றுக்கிழமை முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்தனர். இதற்கிடையே, கல்லூரிக்கு விடுமுறை அளித்து இயக்குநர் ரமேஷ்குமார் திங்கள்கிழமை உத்தரவிட்டார்.
    விடுதி உடனடியாக மூடப்படும் என்றும் மாணவர்கள் கல்லூரி வளாகத்தை விட்டு வெளியேற வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டிருந்தார். இருப்பினும் மாணவர்கள் கல்லூரியை விட்டு வெளியேற மறுத்ததால், பீளமேடு காவல் துறையினர் வரவழைக்கப்பட்டு, மாணவர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர். இதையடுத்து கல்லூரி வளாகம் மூடப்பட்டது. கோடை விடுமுறைக்கு பிறகு ஜூன் முதல் வாரத்தில் மீண்டும் கல்லூரி திறக்கப்படும் என்று ரமேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai