Enable Javscript for better performance
தண்ணீர் விற்பனைக்குத் தடை: கொடிசியாவில் நிறுத்தப்பட்ட தண்ணீர் லாரிகள்- Dinamani

சுடச்சுட

    

    தண்ணீர் விற்பனைக்குத் தடை: கொடிசியாவில் நிறுத்தப்பட்ட தண்ணீர் லாரிகள்

    By DIN  |   Published on : 25th April 2017 07:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வணிகப் பயன்பாட்டுக்கு தண்ணீர் விற்பனை செய்ய கோவை மாநகராட்சி தடை விதித்ததை ஒட்டி, தண்ணீர் லாரி உரிமையாளர்கள் சுமார் 350 வாகனங்களை கொடிசியாவில் திங்கள்கிழமை நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
    கோவை மாநகராட்சிப் பகுதிகளில் கடும் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
    இந்த நிலையில், வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகள், மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள், ஹோட்டல்கள் ஆகியவற்றின் தேவைக்காக வாகனங்களில் விற்பனை செய்யப்படும் தண்ணீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.
     இந்த நிலையில், நிலத்தடி நீரை எடுத்து வணிகப் பயன்பாட்டுக்காக விற்பனை செய்வதற்கு மாநகராட்சி நிர்வாகம் தடை விதித்துள்ளது. இதுகுறித்து தண்ணீர் லாரி உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.இந்த நிலையில், தண்ணீர் லாரி உரிமையாளர்கள், தங்களின்
    400-க்கும் மேற்பட்ட தண்ணீர் லாரிகளை கொடிசியா மைதானத்தில் திங்கள்கிழமை நிறுத்தினர்.
    தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற மாநகராட்சி அதிகாரிகள்,  லாரி உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அத்தியாவசியத் தேவைகளுக்காக குடியிருப்புகள், மருத்துவமனைகளுக்கு தண்ணீர் விற்பனை செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டது. இதன் பின்னர் தண்ணீர் லாரி உரிமையாளர்கள், வாகனங்களை எடுத்துச் சென்றனர்.
    இதுகுறித்து தண்ணீர் விற்பனை செய்யும் உரிமையாளர்கள் கூறுகையில், "அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டுமே தண்ணீர் விற்பனை செய்து வருகிறோம். இதை பொதுமக்களுக்கு தெரிவிக்கவே இங்கு திரண்டோம். இதை வேலை நிறுத்தம் என்றோ அல்லது அரசுக்கு எதிரான போராட்டம் என்றோ நினைக்க வேண்டாம் என்றனர்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai