Enable Javscript for better performance
நகைப் பறிப்பில் ஈடுபட்ட வடமாநில இளைஞர்கள் இருவர் கைது: 70 பவுன் நகை, ரூ. 40 ஆயிரம் பறிமுதல்- Dinamani

சுடச்சுட

    

    நகைப் பறிப்பில் ஈடுபட்ட வடமாநில இளைஞர்கள் இருவர் கைது: 70 பவுன் நகை, ரூ. 40 ஆயிரம் பறிமுதல்

    By DIN  |   Published on : 25th April 2017 07:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோவையில் பல்வேறு பகுதிகளில் பெண்களிடம் நகைப் பறிப்பில் ஈடுபட்ட வடமாநில இளைஞர்கள் இருவரை காவல் துறையினர் திங்கள்கிழமை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 70 பவுன் நகை, ரூ. 40 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.  இதுகுறித்து காவல் துறையினர் கூறியதாவது:
    கோவை மாநகரில் பல்வேறு பகுதிகளில் பெண்களிடம் மர்ம நபர்கள் நகைப் பறிப்பில் ஈடுபட்டு வருவது குறித்து காவல் ஆணையருக்கு அதிக அளவிலான புகார்கள் வரத் தொடங்கின. இதைத் தொடர்ந்து, காவல் ஆணையர் அ.அமல்ராஜ் உத்தரவின்படி, மாநகர காவல் துணை ஆணையர் (சட்டம்-ஒழுங்கு) எஸ்.லட்சுமியின் நேரடி மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
    இந்தத் தனிப்படையினர் பல்வேறு பகுதிகளில் மாறுவேடங்களில் நகைப்பறிப்பு கொள்ளையர்களைத் தேடிவந்தனர். இந்நிலையில், ஆர்.எஸ்.புரம் பகுதியில் சந்தேகத்துக்கு இடமான வகையில் சுற்றித் திரிந்த இருவரை தனிப்படை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை இரவு பிடித்து விசாரணை நடத்தினர்.  விசாரணையில் அவர்கள், மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த பிரதீப் (33), பண்டிட் மண்டேலா (26) என்பதும், இருவரும் பூ மார்க்கெட் தியாகி குமரன் வீதியில் அறை எடுத்துத் தங்கி இருந்ததும் தெரியவந்தது.  இவர்கள், பெரிய கடை வீதி, பீளமேடு உள்ளிட்ட காவல் நிலையங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் தனியாகச் செல்லும் பெண்களிடம் நகைப் பறிப்பில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.
     இதைத் தொடர்ந்து, இருவரையும் கைது செய்த தனிப் படையினர், அவர்களிடமிருந்து 70 பவுன் நகை, ரூ. 40 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திங்கள்கிழமை சிறையில் அடைத்தனர்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai