Enable Javscript for better performance
புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வைஃபை கிளினிக்- Dinamani

சுடச்சுட

    

    புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வைஃபை கிளினிக்

    By DIN  |   Published on : 25th April 2017 07:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஸ்ரீ ராமகிருஷ்ணா புற்றுநோய் ஆராய்ச்சி மற்றும் சிகிச்சை மையம் சார்பில் புற்றுநோய் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வைஃபை கிளினிக் தொடங்கப்பட்டுள்ளது.
    இதுகுறித்து புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் டாக்டர் குகன், செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
    மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள், அவர்களது உறவினர்கள் இந்த கிளினிக் மூலம் புற்றுநோய் தொடர்பான தகவல்களை பெறமுடியும். மருத்துவமனைக்கு வரும் பொதுமக்கள் தங்களது செல்லிடப்பேசியில் வைஃபை இணைத்தால் வைஃபை கிளினிக் தானாக இணைக்கப்பட்டு ஏ.காம் என்ற இணையதளத்தின் உதவியோடு தகவல்களை பெறலாம். இதில் புற்றுநோய் வகைகள் குறித்த தகவல்கள் வரிசைப்படி அமைக்கப்பட்டுள்ளன. இந்த முகவரியில் புற்றுநோய் மையம், ஆலோசனை வழங்குபவரின் அனுபவம் குறித்தும், லீனியர் ஆக்சலரேட்டர், பெட்சிடி படங்கள், சிகிச்சை அளிக்க உள்ள வசதிகள் மற்றும் புற்றுநோய் விழிப்புணர்வு நடவடிக்கைகள் இடம் பெற்றுள்ளன.
    மேலும், தீபம் என்ற புற்றுநோய் பரிசோதனை முகாம் குறித்த விவரங்களும் இடம்பெற்றுள்ளன. இந்த வைஃபை கிளினிக் உடன் டிஜிட்டல் வழி தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ள முடியும். இந்த மையத்தின் மூலம் வெளியிடப்பட்டுள்ள கையேட்டில் அனைத்து வகையான புற்றுநோய் பாதிப்பு, சிகிச்சை முறைகள், நேரம் மற்றும் உணவுக் கட்டுப்பாடு முறைகள் இடம்பெற்றுள்ளன.  புற்றுநோய் குறித்த தகவல்கள் அடங்கிய கையேடுகள் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளன. மேலும் புற்றுநோய் குறித்த இ-புத்தகங்களும் வெளியிடப்பட்டுள்ளன என்றார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai