Enable Javscript for better performance
மணல் விற்பனையை அரசே ஏற்று நடத்த வேண்டும்: ஏ.ஐ.டி.யூ.சி. கோரிக்கை- Dinamani

சுடச்சுட

    

    மணல் விற்பனையை அரசே ஏற்று நடத்த வேண்டும்: ஏ.ஐ.டி.யூ.சி. கோரிக்கை

    By DIN  |   Published on : 25th April 2017 07:03 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தமிழகத்தில் மணல் விற்பனையை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஏ.ஐ.டி.யூ.சி. கட்டடத் தொழிலாளர் சங்கம் சார்பில் ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
    இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் த.ந.ஹரிஹரனிடம் அளித்த மனுவிவரம்:
    நாடு முழுவதும் கட்டுமானத் தொழிலாளர்களுக்கான திட்டப் பலன்களை ஒரேமாதிரி செயல்படுத்த வேண்டும். மணல் தட்டுப்பாடு, கட்டுமானப் பொருள்களின் விலை ஏற்றம் காரணமாக கட்டுமானப் பணிகள் முடங்கியுள்ளன. எனவே, மணல் விற்பனையை அரசே ஏற்று நடத்த வேண்டும்.
    மாவட்ட கட்டுமானத் தொழில் தீர்ப்பாயம் அமைக்க வேண்டும். கட்டடங்களுக்கு 2 சதவீத நலவரி வசூலிக்க வேண்டும். அந்த நிதியை தொழிலாளர்களின் நலனுக்காக செலவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    மதுக்கடையை அகற்ற
    வேண்டும்:
    கோவை, ஆவராம்பாளையம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சார்பில் அளித்த மனு:
    கோவை, ஆவராம்பாளையம் சாலை அருகே குடியிருப்புப் பகுதியில் மதுக்கடையை அகற்ற கோரி பல போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. எனவே, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ள இந்த மதுக்கடையை உடனடியாக அகற்ற வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
     சட்டவிரோத மதுவிற்பனையை தடுக்க வேண்டும்:
     கோவை, வெங்கிட்டாபுரம் 13-ஆவது வார்டு பகுதி என்.எஸ்.ஆர். சாலை, பி அண்ட் டி குடியிருப்பு எதிரே உள்ள மதுக்கடை நீதிமன்ற உத்தரவுப்படி மூடப்பட்டுள்ளது. அந்தக் கடையில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுகிறது. இதனைத் தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வெங்கிட்டாபுரம் கிளை சார்பில் அளித்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    தொழிற்சாலைக்கு அனுமதி அளிக்க கூடாது:
     தொண்டாமுத்தூர் ஒன்றியம், குப்பனூர் கிராமத்தில் சுற்றுச்சூழலை பாதிக்கும் வகையில் கண்ணாடி தயாரிக்கும் தொழிற்சாலைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.  தொழிற்சாலை அமையவுள்ள பகுதியில் இருந்து சில மீட்டர் தொலைவில் குப்பனூர், மாதம்பட்டி, சென்னனூர், கரடிமடை, செல்லப்பகவுண்டன்புதூர் ஆகிய பகுதிகள் அமைந்துள்ளன. எனவே, சுற்றுசூழலுக்கும், பொதுமக்களின் ஆரோக்கியத்துக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் இந்த தொழிற்சாலையை குப்பனூர் பகுதியில் அமைக்க அனுமதி வழங்கக் கூடாது என்று அப்பகுதி மக்கள் அளித்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai