Enable Javscript for better performance
மதுபோதையில் வாகனம் இயக்கிய 285 பேர் மீது வழக்கு- Dinamani

சுடச்சுட

    

    கோவை மாநகரில் கடந்த இரு நாள்களில் மது அருந்தி விட்டு வாகனம் இயக்கியதாக 285 பேர் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
    கோவை மாநகரில் சாலை விபத்துகளைக் குறைக்க காவல் துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
    இந்த நிலையில், வார இறுதி நாள்களான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மது அருந்தி விட்டு வாகனம் இயக்கியதாக 285 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அவர்களிடமிருந்து தலா ரூ. 2 ஆயிரம் அபராதமாக ரூ. 5 லட்சத்து 70 ஆயிரம் வசூலிக்கப்பட்டது.  அதேபோல், தலைக்கவசம் அணியாமல் வாகனம் இயக்கியதாக 2,456 பேர் மீது வழக்குப் பதிவு செய்து ரூ. 2 லட்சத்து 45 ஆயிரத்து 600 வசூலிக்கப்பட்டது.
     அதிவேகமாக வாகனம்
    இயக்குபவர் மீது வழக்கு:
    வாரம் ஒரு திட்டத்தின்படி ஏப்ரல் 24 முதல் ஏப்ரல் 30-ஆம் தேதி வரை நிர்ணயிக்கப்பட்ட வேகத்தை விட அதிவேகமாக வாகனம் இயக்குபவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்படும் என்று மாநகர துணை ஆணையர் (போக்குவரத்து) எஸ்.சரவணன் தெரிவித்தார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai