Enable Javscript for better performance
மாவோயிஸ்டுகள் மீதான வழக்கு: மே 17-க்கு ஒத்திவைப்பு- Dinamani

சுடச்சுட

    

    போலி ஆவணம் கொடுத்து சிம்கார்டு வாங்கியது தொடர்பாக மாவோயிஸ்டு இயக்கத்தைச் சேர்ந்த ஷைனா, அனூப் மேத்யூ ஆகியோரின் மீதான வழக்கு விசாரணை மே 17-ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டது.
    மாவோயிஸ்டு இயக்கத்தைச் சேர்ந்த ரூபேஷ், அவரது மனைவி ஷைனா, அனூப் மேத்யூ, கண்ணன், வீரமணி ஆகியோரை கோவையை அடுத்த கருமத்தம்பட்டியில் 2015 மே 4-ஆம் தேதி கியூ பிரிவு போலீஸார் கைது செய்தனர். இவர்கள் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
     இந்நிலையில், ஷைனா மீது பீளமேடு, ராமநாதபும், கோட்டூர் ஆகிய காவல் நிலையங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் போலி ஆவணங்கள் கொடுத்து சிம்கார்டு வாங்கியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல், அனூப் மேத்யூ மீது பொள்ளாச்சி வட்ட காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதியில் சிம்கார்டு வாங்கியதாகவும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்குகளின் மீதான விசாரணை முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது இருவரையும் காவல் துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
    இதைத் தொடர்ந்து, ஷைனா, அனூப் மேத்யூ மீதான வழக்கின் விசாரணையை மே 17-ஆம் தேதிக்கு மாவட்ட நீதிபதி ஆர்.பொங்கியப்பன் ஒத்திவைத்தார். பின்னர் இருவரையும் பலத்த பாதுகாப்புடன் மத்திய சிறைக்கு போலீஸார் அழைத்துச் சென்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai