Enable Javscript for better performance
மேட்டுப்பாளையத்தில் கல்விக் கண்காட்சி- Dinamani

சுடச்சுட

    

    மேற்படிப்புகள் குறித்த கல்விக் கண்காட்சி மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது.
    மேட்டுப்பாளையம் அரிமா சங்கம், கோவை ரெயின்போ ஈவன்ட் நிறுவனம் சார்பில் நடைபெற்ற கல்விக் கண்காட்சி துவக்க விழாவுக்கு அரிமா சங்க மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் சீனிவாசன் தலைமை வகித்து துவக்கி வைத்தார். அரிமா மாவட்டத் தலைவர் பி.என். ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். ரெயின்போ ஈவன்ட் நிர்வாகி அப்துல் ரகுமான் வரவேற்றார். இதில், அரிமா மாவட்ட முன்னாள் ஆளுநர் வின்சென்ட் வேதராஜ், நிர்வாகிகள் பரமசிவம், சுப்பையன், பொறியாளர் சிவகுமார், கல்வி ஆலோசகர் ஜெயராமன் உட்பட பலரும் பேசினர்.
    கல்விக் கண்காட்சியில் கோவை, திருப்பூர், சேலம், நாமக்கல், ஈரோடு, கொடைக்கானல் பகுதிகளைச் சேர்ந்த 18 பொறியியல், 12 கலைக் கல்லூரிகள் சார்பில் அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.
    இதில், மேற்படிப்புக்குத் தேர்வு செய்ய வேண்டிய கல்லூரிகள், வேலை வாய்ப்பை தரும் படிப்புகள், நிறுவனங்கள், கல்லூரிகளின் சிறப்பு அம்சங்கள், கட்டணங்கள் உள்பட மாணவர்களுக்குத் தேவையான தகவல்கள் அனைத்தும் வழங்கப்பட்டன.
    கல்லூரி படிப்பு குறித்த மாணவ, மாணவிகளின் பல்வேறு வினாக்களுக்கு ஏசியன் பொறியியல் கல்லூரி நிர்வாக அதிகாரி சதீஷ், குமரன் கலை, அறிவியல் கல்லூரி முதல்வர் சீனிவாசன் ஆகியோர் விளக்கமளித்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai