Enable Javscript for better performance
வாயில் கருப்புத் துணி கட்டி விவசாயிகள் போராட்டம்- Dinamani

சுடச்சுட

    

    விவசாயக் கடனை ரத்து செய்வது, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வாயில் கருப்புத் துணி கட்டி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் சு.பழனிசாமி தலைமை வகித்தார்.
    இதில், தமிழக விவசாயிகள் வாங்கிய கடன்களை அனைத்தையும் மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதுடன் நீராதாரங்களை பாதுகாத்து நதிகளை இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    60 வயது பூர்த்தி அடைந்த விவசாயிகளுக்கு அரசு ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர். பின்னர் இக்கோரிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
    இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கச் செயலாளர் திருஞானசம்பந்தம், தேசிய விவசாயிகள் சங்கத் தலைவர் பேரூர் பழனிசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai