Enable Javscript for better performance
வால்பாறை முத்துமாரியம்மன் கோயில் திருவிழா- Dinamani

சுடச்சுட

    

    வால்பாறை அண்ணா நகரில் உள்ள முத்துமாரியம்ம்ன் கோயில் 30-ஆம் ஆண்டு திருவிழா திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் துவங்கியது.
    இதையொட்டி, கோயில் வளாகத்தில் உள்ள கொடிக்கம்பத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கொடியேற்றம் நடைபெற்றது. தொடர்ந்து, 26-ஆம் தேதி காலை 9 மணிக்கு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இருந்து பால்குடம் எடுத்து வருதல், 27-ஆம் தேதி காலை 10.30 மணிக்கு சுவாமிக்கு திருக்கல்யாணம், மதியம் 12 மணிக்கு அன்னதானம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
    28-ஆம் தேதி மாலை 5 மணிக்கு முளைப்பாரி, பூவோடு எடுத்து வருதல். இரவு 7 மணிக்கு பூக்குண்டம் இறங்குதல் நடைபெறும். 29-ஆம் தேதி காலை 9 மணிக்கு முத்துமாரியம்மன் திருவீதி உலா நடைபெற உள்ளது. வாணவேடிக்கையுடன் 30-ஆம் தேதி விழா நிறைவடைகிறது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai