Enable Javscript for better performance
ஸ்ரீ சிருங்கேரி சங்கராச்சார்ய சுவாமிகள் கோவை வருகை- Dinamani

சுடச்சுட

    

    ஸ்ரீ சிருங்கேரி சங்கர மடத்தின் சங்கராச்சாரியார்கள் ஸ்ரீ பாரதி தீர்த்த சுவாமிகள், ஸ்ரீ விதுரசேகர பாரதி சுவாமிகள் ஆகியோர் கோவைக்கு திங்கள்கிழமை வருகை தந்தனர்.
    கோவை, ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள ஸ்ரீ சாரதாம்பாள் கோயிலில் மே 2-ஆம் தேதி வரை நடைபெறும் விஜயயாத்ரா, சங்கர ஜயந்தி உத்ஸவங்களில் பங்கேற்பதற்காக இவர்கள் கோவை வந்துள்ளனர்.
    திங்கள்கிழமை இரவு கோவை வந்த சுவாமிகள் இருவருக்கும் சாரதாம்பாள் கோயில் பகுதியில் பஞ்சவாத்தியங்கள் முழங்க சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
    இதைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை முதல் மே 1-ஆம் தேதி வரை தினசரி காலை 10.30 மணிக்கு பொதுமக்கள் தரிசனம், பாத பூஜை, பிக்ஷா வந்தனம் ஆகியவையும், இரவு 8.30 மணிக்கு சந்திரமெளலீஸ்வர பூஜையும் நடைபெறுகின்றன.
     வரும் 27-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை தினசரி காலை 8 முதல் நண்பகல் 12.30 மணி வரை சங்கர ஜயந்தி பூஜை, வேத பாராயணம், சங்கர திக்விஜயம் ஆகியவை நடைபெறுகின்றன.
     வரும் 30-ஆம் தேதி நண்பகல் 12 மணிக்கு ஜகத்குரு சங்கராச்சாரியாரின் ஸ்ரீ சங்கர ஜயந்தி பூஜை நடைபெறுகிறது. அதேபோல், 27-ஆம் தேதி முதல் 29-ஆம் தேதி வரை தினசரி மாலை 5 மணிக்கு ஆச்சார்யார்களின் தலைமையில் சங்கர திக்விஜய பாராயணம், உபன்யாசகர்களின் ப்ரவசனமும், வரும் 30-ஆம் தேதி மாலை 5 மணிக்கு ஆச்சார்யார்களின் தலைமையில் அனுக்ரஹ பாஷணம், இரவு 7.30 மணிக்கு பிரமாண்ட சங்கர ஜயந்தி ஊர்வலமும் நடைபெறுகின்றன.
    இதைத் தொடர்ந்து மே 1-ஆம் தேதி குரு வந்தனம் நடைபெறுகிறது. மே 2-ஆம் தேதி காலை 10.30 மணிக்கு பொதுமக்கள் தரிசனம், பாத பூஜையும், பிற்பகல் 3 மணிக்கு மந்த்ராட்சதையும் நடைபெறுகின்றன. பின்னர் மாலை 4 மணியளவில் சுவாமிகள் திருப்பூர் புறப்படுகின்றனர்.
    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஸ்ரீ சிருங்கேரி சங்கர மடம், ஸ்ரீ சாரதாலய நிர்வாகிகள் செய்து வருகின்றனர். இதுகுறித்த மேலும் விவரங்களுக்கு 0422 2220760, 98430 33550 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai