Enable Javscript for better performance
அரசு ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்- Dinamani

சுடச்சுட

    

    புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்யவேண்டும், காலிப் பணியிடங்களை நிரப்பவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர்கள் செவ்வாய்க்கிழமை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
     ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற போராட்டத்துக்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் குமார் தலைமை வகித்தார்.
    இதில், புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்யவேண்டும். அனைத்து அரசுத் துறைகளில் உள்ள 60 சதவீதம் காலிப் பணியிடங்களை நிரப்பவேண்டும். 20 சதவீதம் இடைக்கால நிவாரணம் வழங்கவேண்டும். நேரடிப் பேச்சுவார்த்தை மூலமாக ஊதிய மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.
    சிறப்புக் காலமுறை ஊதியத்தை ரத்து செய்து அனைவருக்கும் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். சாலைப் பணியாளர்களின் 41 மாதப் பணி நீக்கக் காலத்தை பணிக் காலமாக வரன்முறைப்படுத்த வேண்டும். தொழில்நுட்ப ஊழியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம், வனத் துறை, ஊராட்சி, பேரூராட்சிகளில் பணிபுரியும் அடிப்படை ஊழியர்கள் அனைவருக்கும் காலமுறை ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
    மேலும், கோரிக்கைகளை நிறைவேற்றாதபட்சத்தில் மறியல், காத்திருப்புப் போராட்டங்களில் ஈடுபடப் போவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai