Enable Javscript for better performance
இந்தியா, கஜகஸ்தான் இடையே ஆசிரியர் - மாணவர் பரிமாற்றம்: கஜகஸ்தான் தூதர் தகவல்- Dinamani

சுடச்சுட

    

    இந்தியா, கஜகஸ்தான் இடையே ஆசிரியர் - மாணவர் பரிமாற்றம்: கஜகஸ்தான் தூதர் தகவல்

    By DIN  |   Published on : 26th April 2017 06:42 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    இந்தியா, கஜகஸ்தான் நாடுகளுக்கு இடையே ஆசிரியர் - மாணவர் பரிமாற்றம் செய்து கொள்ள முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இந்தியாவுக்கான கஜகஸ்தான் குடியரசின் தூதர் புலட் சர்சென்பேயேவ் தெரிவித்துள்ளார்.
    கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில், "கஜகஸ்தானில் உயர் கல்விக்கான வாய்ப்புகள்' எனும் தலைப்பிலான கருத்தரங்கு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்தக் கருத்தரங்கில் பங்கேற்ற இந்தியாவுக்கான கஜகஸ்தான் குடியரசின் தூதர் புலட் சர்சென்பேயேவ் பேசியதாவது:
    இந்தியா, கஜகஸ்தான இடையிலான தூதரக உறவுக்கான 25 ஆண்டு நிறைவு விழாவாக 2017-ஆம் ஆண்டை கொண்டாட முடிவு செய்துள்ளோம். இரு நாட்டு உறவுகளை மேம்படுத்துவதன் ஒரு பகுதியாக இரு நாட்டுப் பல்கலைக்கழகங்களுக்கு இடையே புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன.
    அதன்படி, கோவை பாரதியார் பல்கலைக்கழகம், கஜகஸ்தான் நாட்டுப் பல்கலைக்கழகங்களுக்கு இடையே மாணவர்கள் பரிமாற்றம், ஆசியர்கள் பரிமாற்றம், கூட்டுக் கருத்தரங்குகளுக்கான வாய்ப்புகளை ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
     100 சதவீதம் கல்வியறிவு பெற்றுள்ள கஜகஸ்தான் நாடு, கல்வியில் மட்டுமின்றி மல்யுத்தம், பளு தூக்குதல், ஹாக்கி, குத்துச்சண்டை உள்ளிட்ட விளையாட்டுகளிலும் முன்னணியில் உள்ளது என்றார்.
    இக்கருத்தரங்கில் கஜகஸ்தான் கெளரவ தூதர் சூரஜ் சாந்தகுமார், கினியாவின் கெளரவ தூதர் கமல்குமார், பல்கலைக்கழகப் பதிவாளர் (பொறுப்பு) ப.வனிதா, வெளிநாட்டு மாணவர்களுக்கான சேவைப் பிரிவு ஒருங்கிணைப்பாளர் டி.தேவி, ஆராய்ச்சி மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai