Enable Javscript for better performance
எஸ்ஆர்எம்யூ தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி எஸ்ஆர்எம்யூ தொழிற்சங்கத்தினர் கோவையில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    கோவை, கூட்ஷெட் ரோடு பணிமனையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு எஸ்ஆர்எம்யூ சேலம் கோட்டச் செயலாளர் கோவிந்தன் தலைமை வகித்தார்.
     இதில், ரயில்வே துறையைத் தனியார் மயமாக்குவதைக் கைவிட வேண்டும். புதிய ஓய்வூதியத் திட்டத்தை மாற்றியமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட ரயில்வே தொழிலாளர்களின் 36 அம்சக் கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
     இந்த ஆர்ப்பாட்டத்தில், சங்கத்தின் கோவை கிளைப் பொறுப்பாளர் சுந்தரவடிவேலு, கிளைச் செயலாளர் ஜோன், தலைவர் சங்கர் உள்ளிட்ட திரளான ரயில்வே ஊழியர்கள் கலந்துகொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai