Enable Javscript for better performance
கோவையில் 5-ஆவது நாளாக அரசு மருத்துவர்கள் போராட்டம்- Dinamani

சுடச்சுட

    

    மருத்துவ மேற்படிப்பில் அரசு மருத்துவர்களுக்கு அளிக்கப்பட்டு வந்த 50 சதவீத இடஒதுக்கீட்டை ரத்து செய்ததைக் கண்டித்து கோவை அரசு மருத்துவர்கள் 5-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமை பணியைப் புறக்கணித்து வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்.டி., எம்.எஸ்., உள்ளிட்ட மருத்துவ மேற்படிப்பு சேர்க்கையில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், தற்போது வழங்கப்பட்டு வந்த இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டுள்ளது.
    இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கோவை மாவட்ட அரசு மருத்துவர்கள் சங்கத் தலைவர் ரவிசங்கர் தலைமையில் ஏப்ரல் 20-ஆம் தேதி முதல் மருத்துவர்கள் பணியைப் புறக்கணித்துப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
    இந்நிலையில், ஐந்தாவது நாளாக செவ்வாய்க்கிழமையும் காலை 8 முதல் பகல் 1 மணி வரை பணியைப் புறக்கணித்து மருத்துவமனை வளாகத்தில் அவர்கள் தர்னாவில் ஈடுபட்டனர்.
    இதில், மருத்துவர்கள், பயிற்சி மருத்துவர்கள், மருத்துவ மாணவர்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai