Enable Javscript for better performance
திருப்பதி தரிசனத்துக்கு ஆர்.எஸ்.புரம் தபால் நிலையத்தில் முன்பதிவு- Dinamani

சுடச்சுட

    

    திருப்பதி தரிசனத்துக்கு ஆர்.எஸ்.புரம் தபால் நிலையத்தில் முன்பதிவு

    By DIN  |   Published on : 26th April 2017 06:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோவை, ஆர்.எஸ்.புரத்தில் உள்ள தலைமைத் தபால் நிலையம் மூலமாக திருப்பதி சிறப்பு தரிசனத்துக்கு முன்பதிவு செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
     பக்தர்களின் வசதிக்காக திருமலை, திருப்பதி தேவஸ்தானம் சார்பில் கோவை, ஆர்.எஸ்.புரத்தில் உள்ள தலைமைத் தபால் நிலையம் மூலமாக சிறப்பு தரிசன முன்பதிவுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில், 56 நாள்களுக்கு முன்னரே பக்தர்கள் ரூ. 300-க்கான சிறப்பு தரிசனத்துக்கு முன்பதிவு செய்து கொள்ளலாம்.
     இதன்மூலமாக காலை 10, 11, பிற்பகல் 12, 1 ஆகிய தரிசன நேரங்களுக்கு முன்பதிவு செய்து கொள்ள முடியும். அதிகபட்சமாக ஒரு பக்தர் 6 டிக்கெட்கள் முன்பதிவு செய்யலாம். முன்பதிவு செய்ய 6 பேரில் ஒருவர் நேரில் சென்றாலே போதுமானது.புகைப்படமும் பதிவேற்றம் செய்து கொள்ள முடியும்.
     முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கு பார்கோடு கொண்ட டிக்கெட் வழங்கப்படும்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai