நியாயவிலைக் கடை, வீடுகளை சேதப்படுத்திய யானைகள்
By DIN | Published on : 26th April 2017 06:45 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
வால்பாறை அருகே நியாயவிலைக் கடை மற்றும் வீடுகளை மீண்டும் யானைகள் சேதப்படுத்தியுள்ளன.
வால்பாறை வட்டாரத்தில் உள்ள எஸ்டேட் பகுதிகளில் கடந்த ஒரு மாத காலமாக யானைகள் நடமாட்டம் இல்லாமல் இருந்தது. இந்நிலையில், குரங்குமுடி எஸ்டேட் பகுதிக்குள் ஞாயிற்றுக்கிழமை இரவு நுழைந்த 5 யானைகள் அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளைத் தாக்கி சேதம் ஏற்படுத்தி வருகின்றன.
இந்நிலையில், ஸ்டேன்மோர் எஸ்டேட் பகுதிக்கு திங்கள்கிழமை இரவு வந்த 5 யானைகள், எஸ்டேட் அலுவலக அதிகாரி ராமதாஸ் என்பவரது குடியிருப்பின் ஜன்னல்களை தும்பிக்கையால் சேதப்படுத்தி, சமையலறைக்குள் இருந்த பொருள்களை வெளியே எடுத்துச் சாப்பிட்டு சேதப்படுத்தியுள்ளன.
அதைத்தொடர்ந்து, அருகில் உள்ள நியாயவிலைக் கடையின் கதவுகளை உடைத்து உள்ளிருந்த பொருள்களையும் சாப்பிட்டுள்ளன.
இதுகுறித்து தகவலறிந்து வந்த வனத் துறையினர் யானைகளை வனப் பகுதிக்குள் விரட்டினர்.