Enable Javscript for better performance
புதிய குடும்ப அட்டை பெற இ-சேவை மையத்தில் விண்ணப்பிக்கலாம்- Dinamani

சுடச்சுட

    

    புதிய குடும்ப அட்டை பெற இ-சேவை மையத்தில் விண்ணப்பிக்கலாம்

    By DIN  |   Published on : 26th April 2017 06:42 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதிய குடும்ப அட்டை பெற இ-சேவை மையத்தில் பதிவு செய்து 45 நாள்களுக்குள் பெற்றுக் கொள்ளலாம் என ஆட்சியர் த.ந.ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.
     இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள செய்தி:
    பொது விநியோகத் திட்டம் முழுவதுமாக கணினிமயமாக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஸ்மார்ட் கார்டு வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.
    கோவை மாவட்டத்தில் 9 லட்சத்து 55 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்களுக்கு புதிய ஸ்மார்ட் கார்டு வழங்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் மூலமாக பொது மக்கள் நியாயவிலைக் கடைகளில் பொருள்களை வாங்குவதற்கு எளிதாகவும், அரசின் திட்டங்களைப் பெறுவதற்கு பயனுள்ளதாகவும் அமைந்துள்ளது.
    குறிப்பாக புத்தக வடிவில் இல்லாமல் அடையாள அட்டை வடிவில் உள்ளதால் எளிதாகக் கையாள முடியும். ஸ்மார்ட் கார்டு தயாரான பின்னர் குடும்ப அட்டைதாரர்களின் செல்லிடப்பேசிக்கு குறுந்தகவல் அனுப்பப்படும்.
    தகவல் கிடைக்கப் பெற்றவுடன் நியாயவிலை கடைகளுக்கு நேரில் சென்று குடும்ப அட்டைதாரர்கள் அனைவரும் ஸ்மார்ட் கார்டு பெற்றுக் கொள்ளலாம். கோவை மாவட்டத்தில் மே மாத இறுதிக்குள் ஸ்மார்ட் கார்டு வழங்கும் பணியை முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
    இத்திட்டத்தின் மூலமாக போலிகளற்ற குடும்ப அட்டைகள் வழங்க முடியும். எனவே, புதிய குடும்ப அட்டை வேண்டுவோர் இ-சேவை மையத்தில் விண்ணப்பித்து 45 நாள்களுக்குள் பெற்றுக் கொள்ளலாம்.  இதுதவிர நியாயவிலைக் கடைகளில் பொருள்களின் இருப்பு நிலை மற்றும் பொருள்கள் வாங்கும்போது பொருள்களின் விலை ஆகியவற்றைக் குறுஞ்செய்தி மூலமாகத் தெரிந்து கொள்ள முடியும். இணையதளம் மூலமாகவும் ஸ்மார்ட் கார்டில் திருத்தம் மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai