Enable Javscript for better performance
6 மாதங்களில் 1,047 குடிநீர் இணைப்புகள் துண்டிப்பு- Dinamani

சுடச்சுட

    

    கோவை மாநகராட்சிக்கு சொத்து வரி, குடிநீர்க் கட்டணம் செலுத்தாதது, அனுமதியற்ற குடிநீர் இணைப்பு போன்ற காரணங்களால் கடந்த 6 மாதங்களில் 1,047 குடிநீர் இணைப்புகளை மாநகராட்சி அதிகாரிகள் துண்டித்துள்ளனர்.
     கோவை மாநகராட்சியில் உள்ள 5 மண்டலங்களில் சொத்து வரி, குடிநீர்க் கட்டணம் செலுத்தாதவர்கள் மற்றும் அனுமதியற்ற குடிநீர் இணைப்புகளைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க மாநகராட்சி ஆணையர் விஜயகார்த்திகேயன் உத்தரவிட்டார். அதன்படி, கடந்த 6 மாதங்களில் தெற்கு மண்டலத்தில் 385 குடிநீர் இணைப்புகளும், கிழக்கு மண்டலத்தில் 137 இணைப்புகளும், வடக்கு மண்டலத்தில் 148 இணைப்புகளும், மேற்கு மண்டலத்தில் 68 இணைப்புகளும், மத்திய மண்டலத்தில் 309 என மொத்தம் 1,047 குடிநீர் இணைப்புகளை மாநகராட்சி அதிகாரிகள் துண்டித்துள்ளனர்.
     மேலும், சொத்து வரி, இதர வரிகள் செலுத்தாத நிலுவைதாரர்களின் குடிநீர்க் குழாய் இணைப்புகள், பாதாளச் சாக்கடை இணைப்புகள் துண்டிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வாடகை பாக்கி, வரி நிலுவைகளை செலுத்தி சட்ட நடவடிக்கைகளைத் தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai