Enable Javscript for better performance
அன்னூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அரசு ஊழியர்கள் தர்னா- Dinamani

சுடச்சுட

    

    அன்னூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அரசு ஊழியர்கள் தர்னா

    By DIN  |   Published on : 27th April 2017 06:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அன்னூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தினர் புதன்கிழமை தர்னாவில்  ஈடுபட்டனர்.
    தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தின் 2-ஆவது நாளான புதன்கிழமை அன்னூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தர்னா நடைபெற்றது. இதற்கு வட்டாரத் தலைவர் கோவிந்தசாமி தலைமை வகித்தார். ஊரக வளர்ச்சித் துறை மாநிலக் குழு உறுப்பினர் இளவரசு, சத்துணவு ஊழியர்கள் சங்கத் தலைவர் தாமோதரசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
    இதில், புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். அனைத்து அரசுத் துறைகளிலும் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டன.
    தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க வட்டக் கிளைச் செயலாளர் சந்தோஷ்குமார், தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை ஊழியர்கள் சங்க மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ராமமூர்த்தி, ஊராட்சிச் செயலர்கள் சங்க ஒன்றியச் செயலாளர் சாமிநாதன், அனைத்துத் துறை அரசு ஊழியர்கள் உள்பட 150 பேர் கலந்துகொண்டனர்.
    சூலூரில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்... கோரிக்கைகளை வலியுறுத்தி சூலூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தினர் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், நேரில் கலந்துபேசி ஊதிய மாற்றம் வழங்க வேண்டும். சாலைப் பணியாளர்களுக்கு 41 மாத பணி நீக்க காலத்தை பணிக் காலமாக வரன்முறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai