Enable Javscript for better performance
அரசு மருத்துவர்கள் மனிதச் சங்கிலிப் போராட்டம்- Dinamani

சுடச்சுட

    

    மருத்துவ மேற்படிப்பில், அரசு மருத்துவர்களுக்கான 50 சதவீத இட ஒதுக்கீட்டை ரத்து செய்ததைக் கண்டித்து கோவையில் அரசு மருத்துவர்கள் புதன்கிழமை மனிதச் சங்கிலிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
     தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்.டி., எம்.எஸ். உள்ளிட்ட மருத்துவ மேற்படிப்பு சேர்க்கையில், அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், தற்போது இந்த இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டுள்ளது.
     இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கோவை மாவட்ட அரசு மருத்துவர்கள் சங்கத் தலைவர் ரவிசங்கர் தலைமையில் கடந்த ஏப்ரல் 20-ஆம் தேதி முதல் மருத்துவர்கள் பணிகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் 6-ஆவது நாளாக அரசு மருத்துவர்கள் பணியைப் புறக்கணித்து மருத்துவமனை வளாகத்தில் புதன்கிழமை மனிதச் சங்கிலிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
     மருத்துவர்கள், பயிற்சி மருத்துவர்கள் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டதால் நூற்றுக்கணக்கான புற நோயாளிகள், உள் நோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல் பாதிக்கப்பட்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai