டெங்கு காய்ச்சல்: 8 பேருக்கு சிகிச்சை
By DIN | Published on : 27th April 2017 06:30 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
டெங்கு காய்ச்சல் பாதிப்பு காரணமாக கோவை அரசு மருத்துவமனையில் 8 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கோவை மாவட்டம், கண்ணம்பாளையைத்தைச் சேர்ந்த தீபக் (6), பொன்னையமருதூர் சாலையைச் சேர்ந்த ஜித்தின் (2), சரவணம்பட்டியைச் சேர்ந்த சாய்பிரசாத் (7), கருப்பராயன்கோயில் வீதியைச் சேர்ந்த பவதாரணி (12), கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த தனுஷ் (5), மதுக்கரையைச் சேர்ந்த கார்த்திக் (6), உக்கடத்தைச் சேர்ந்த அகமது அன்வர் (11), திருப்பூர் மாவட்டம், பெருமாநல்லூரைச் சேர்ந்த சிபின் (10) ஆகிய 8 பேர் டெங்கு காய்ச்சல் பாதிப்பு காரணமாக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு தனி வார்டில் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.