Enable Javscript for better performance
நதிநீர் இணைப்பை வலியுறுத்தி இருசக்கர வாகனப் பிரசாரம்- Dinamani

சுடச்சுட

    

    நதிநீர் இணைப்பை வலியுறுத்தி இருசக்கர வாகனப் பிரசாரம்

    By DIN  |   Published on : 27th April 2017 06:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    இந்தியாவில் உள்ள நதிகளை இணைக்க வலியுறுத்தி சித்தூர் பகுதியைச் சேர்ந்த தேசியப் பேரிடர் மேலாண்மைச் செயல் அமைப்பு உறுப்பினர்கள் 5 பேர் இந்தியா முழுவதும் இருசக்கர வாகனத்தில் பிரசார சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ளனர்.
    இதுகுறித்து, நிலநடுக்க ஆராய்ச்சியாளரும், தேசியப் பேரிடர் மேலாண்மைச் செயல் அமைப்பின் உறுப்பினருமான சரவணகுமார் கூறியதாவது:  
    இந்தியாவில் உள்ள நதிகளை இணைக்க வேண்டும் என நீண்ட காலமாக  கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. ஆனால், நதிநீர் இணைப்பு என்பது தற்போதுவரை கனவுத் திட்டமாகவே உள்ளது. ஒரு பகுதியில் கடுமையான வறட்சியும், மற்றொரு பகுதியில் வெள்ளத்தால் சேதமும் ஏற்பட்டு வருகிறது.
    வெள்ளத்தால் ஏற்படும் சேதத்தைத் தவிர்க்கவும், வறட்சியால் ஏற்படும் பாதிப்பைத் தவிர்க்கவும் நதிகளை இணைக்க வேண்டும் என கோரி, கேரள மாநிலம், சித்தூர் பகுதியைச் சேர்ந்த தேசியப் பேரிடர் மேலாண்மைச் செயல் அமைப்பின் உறுப்பினர்களான ஸ்ரீதரன், தனபால் சுப்பிரமணியம், ராஜா, பிரஷாந்த் மற்றும் நான் (சரவணகுமார்) ஆகியோர் ஏப்ரல் 28-ஆம் தேதி இருசக்கர வாகனப் பிரசார சுற்றுப் பயணத்தைத் தொடங்குகிறோம்.
    மேற்குத் தொடர்ச்சி மலையில் தொடங்கும் ஆழியாறு தமிழகத்தில் மூன்று மாவட்டங்களில் விவசாயத்துக்கும், குடிநீருக்கும் பயன்படுவதுடன் அதே ஆறு, கேரளத்துக்குள் சென்றவுடன் பாரதப்புழா எனும் பெயரில் கேரளத்தில் பல மாவட்டங்களில் பயணித்து இறுதியாக அரபிக்கடலில் கலக்கிறது. இதனால்,  பாரதத்தின் பெயரில் உள்ள பாரதப்புழா ஆற்றின் நீரைக் கலசங்களில்  எடுத்துக்கொண்டு பயணத்தைத் தொடங்குகிறோம்.
    பாரதப்புழையில் தொடங்கும் இந்த 25 நாள் பயணம், லே-லடாக், இமயம் தொட்டு பூஜித்து, அயோத்தி ராமஜென்ம பூமி, திரிவேணி சங்கமம், பிரயாகை - வாராணசி, புத்தகயா, ராமேசுவரம்-ராமர் பாலம், திருச்செந்தூர் வந்து மீண்டும் சித்தூர் பாரதப்புழையில் முடிவடையும் என்றார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai