Enable Javscript for better performance
நேரு கல்விக் குழுமம் சார்பில் நல்லாசிரியர்களுக்கு விருது- Dinamani

சுடச்சுட

    

    நேரு கல்விக் குழுமம் சார்பில் நல்லாசிரியர்களுக்கு விருது

    By DIN  |   Published on : 27th April 2017 06:39 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நேரு கல்விக் குழுமம் சார்பில் நல்லாசிரியர்கள், சிறந்த கல்லூரி முதல்வர்கள், வாழ்நாள் சாதனையாளர்களுக்கான விருது வழங்கும் விழா அண்மையில் நடைபெற்றது.
     தமிழகம், கேரளத்தில் இயங்கி வரும் நேரு கல்விக் குழுமம் சார்பில் ஆண்டுதோறும் இந்த இரு மாநிலங்களிலும் உள்ள சிறந்த ஆசிரியர்கள், கல்வி நிறுவனங்களின் முதல்வர்கள் தேர்வு செய்யப்பட்டு,நேரு கல்விக் குழும நிறுவனர் பி.கே.தாஸ் நினைவு விருது வழங்கப்பட்டு வருகிறது.
     இந்த ஆண்டுக்கான விருது வழங்கும் விழா கல்லூரி வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது. நேரு கலை, அறிவியல் கல்லூரி முதல்வர் பி.அனிருதன் வரவேற்றார். கல்விக் குழுமங்களின் தலைமை நிர்வாக அதிகாரியும், செயலருமான பி.கிருஷ்ணகுமார் முன்னிலை வகித்தார்.
     சிறப்பு விருந்தினராக கோவை மாவட்ட ஆதி திராவிடர், பழங்குடியினர் நல அலுவலர் மோகன் கலந்து கொண்டு சிறந்த ஆசிரியர்களுக்கு விருதுகளை வழங்கினார். அண்ணாமலை பல்கலைக்கழக ஆட்சிக் குழு உறுப்பினரான பேராசிரியர் வி.திருவள்ளுவன் கெளரவ விருந்தினராகக் கலந்து கொண்டார்.
     இதில், பொள்ளாச்சி ஆரோக்கியமாதா மெட்ரிக் பள்ளியின் ஆசிரியர் மரியா, ராஜபாளையம் கெனுப் காமராஜ் பள்ளியின் டி.என்.ராமசாமி, பத்தனம்திட்டா பிலிவர்ஸ் சர்ச் பள்ளியின் ஷெர்லி ஆன் தாமஸ், பாலக்காடு லயன்ஸ் பள்ளியின் பி.உமாதேவி ஆகியோருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
     சிறந்த முதல்வர்களுக்கான விருதை பீளமேடு கோபால் நாயுடு பள்ளி முதல்வர் மனோரமா, என்.எஸ்.மெட்ரிக் பள்ளி முதல்வர் சுமதி ஸ்ரீதர், சிந்தி வித்யாலயா பள்ளி முதல்வர் ஆர்.கெளரி, பாலக்காடு புனித ரபேல் கதீட்ரல் பள்ளி முதல்வர் சனில் ஜோஸ், கோட்டயம் எஸ்.எஃப்.எஸ்.பப்ளிக் பள்ளியின் பி.கே.ராய், கஞ்சிக்கோடு ஹோலி டிரினிட்டி பள்ளியின் சித்ரா கோகுல் ஆகியோர் பெற்றனர்.
     இதேபோல், தமிழகத்தைச் சேர்ந்த 44 ஆசிரியர்களுக்கும், கேரளத்தைச் சேர்ந்த 32 ஆசிரியர்களுக்கும் நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது. நேரு மேலாண்மையியல் கல்லூரி முதல்வர் பிராங்க்ளின் ஜான், நேரு தகவல் தொழில்நுட்பம், மேலாண்மைக் கல்லூரி முதல்வர் மோசஸ் டேனியல் உள்ளிட்டோர் விழாவில் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ஜி.வசந்திமாலா நன்றி கூறினார்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai