Enable Javscript for better performance
பொள்ளாச்சி, கிணத்துக்கடவு பகுதிகளில் நிலவும் குடிநீர்ப் பிரச்னைக்குத் தீர்வு காண ஆலோசனை- Dinamani

சுடச்சுட

    

    பொள்ளாச்சி, கிணத்துக்கடவு பகுதிகளில் நிலவும் குடிநீர்ப் பிரச்னைக்குத் தீர்வு காண ஆலோசனை

    By DIN  |   Published on : 27th April 2017 06:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கிணத்துக்கடவு, பொள்ளாச்சி பகுதிகளில் நிலவும் குடிநீர்ப் பிரச்னை குறித்த ஆலோசனைக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.
     இந்த ஆலோசனைக் கூட்டத்துக்கு தலைமை வகித்து சட்டப் பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் பேசியதாவது:
      குடிநீர்ப் பற்றாக்குறையைச் சமாளிக்க பொதுமக்கள் தண்ணீரை வீணாக்காமல் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும். அம்பராம்பாளையம் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தில், கிணத்துக்கடவு தாலுகாவில் 23 இடங்களில் பிரதானக் குழாய்களில் ஏற்பட்ட உடைப்புகள் கண்டறிப்பட்டு, அவற்றில் 21 உடைப்புகள் சரிசெய்யப்பட்டு உள்ளன. பொள்ளாச்சி தாலுகா பகுதியில் 29 இடங்களில் உடைப்புகள் கண்டறிப்பட்டு அவற்றில் 18 உடைப்புகள் சரிசெய்யப்பட்டுள்ளன. மீதமுள்ள குழாய் உடைப்புகளைச் சரி செய்யும் பணி போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது.
      குடிநீர்ப் பிரச்னை தீரும் வரை வட்டார வளர்ச்சி அதிகாரிகள், வட்டாட்சியர்கள், குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் காலை 6 முதல் 7.30 மணி வரை தங்கள் பகுதியில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். தண்ணீர்த் திருட்டில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றார்.
     கிணத்துக்கடவில் நடைபெற்ற கூட்டத்தில் சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினர் முத்துகருப்பண்ணசாமி, பேரூராட்சி துணைச் செயலாளர் டி.எல்.சிங் உள்ளிட்டோரும், பொள்ளாச்சியில் நடைபெற்ற கூட்டத்தில் ஒன்றியச் செயலாளர்கள் சக்திவேல், தம்பு மற்றும் அரசுத் துறைகளின் அதிகாரிகள் பங்கேற்றனர்.
     அதைத் தொடர்ந்து, பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள், தங்கள் பகுதிகளில் நிலவும்  குடிநீர்ப் பிரச்னை குறித்து சட்டப் பேரவை துணைத் தலைவரிடம் தெரிவித்தனர். இதையடுத்து, குடிநீர்ப் பிரச்னைகளைத் தீர்க்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai