Enable Javscript for better performance
மதுக்கரையில் மின்னணு குடும்ப அட்டை வழங்கும் பணி துவக்கம்- Dinamani

சுடச்சுட

    

    மதுக்கரையில் மின்னணு குடும்ப அட்டை வழங்கும் பணி துவக்கம்

    By DIN  |   Published on : 27th April 2017 06:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மதுக்கரை ஒன்றியத்துக்கு உள்பட்ட 11 நியாயவிலைக் கடைகளில், மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கும் பணி புதன்கிழமை தொடங்கியது.
     கோவையை அடுத்த மதுக்கரையில் குடும்ப அட்டையுடன் ஆதார் எண்ணைப் பதிவு செய்து கொண்ட அனைத்துக் குடும்ப அட்டைதாரர்களுக்கும் மின்னணு குடும்ப அட்டை வழங்கும் பணியை கிணத்துக்கடவு சட்டப் பேரவை உறுப்பினர் எட்டிமடை சண்முகம் புதன்கிழமை துவக்கி வைத்தார்.
     கோவை தெற்கு குடிமைப் பொருள் வழங்கல் துறை தனி வட்டாட்சியர், கூட்டுறவு சங்க தலைவர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர். 100-க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் மின்னணு குடும்ப அட்டைகளைப் பெற்றுக் கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai