Enable Javscript for better performance
மதுக் கடையில் தகராறு: ஓட்டுநர் கொலை; நண்பர் கைது- Dinamani

சுடச்சுட

    

    மது போதையினால் ஏற்பட்ட தகராறில் ஓட்டுநரை கீழே தள்ளிக் கொலை செய்ததாக அவரது நண்பர் கைது செய்யப்பட்டுள்ளார்.
    கோவை பி.என்.புதூரைச் சேர்ந்தவர் வாகன ஓட்டுநர் விஜய்ஆனந்த் (30). வீரகேரளத்தைச் சேர்ந்தவர் வெல்டிங் தொழிலாளி வினோத் (28). இவர்கள் இருவரும் நண்பர்கள்.
    இந்நிலையில், இவர்கள் இருவரும் வடவள்ளி அருகே சிறுவாணி சாலையில் உள்ள மதுக் கடையில் புதன்கிழமை மது அருந்திக் கொண்டிருந்தனர். அப்போது வினோத், தனது செல்லிடப்பேசியை மேசை மீது வைத்து விட்டு, தின்பண்டம் வாங்கச் சென்றாராம். அவர் திரும்பிவந்து பார்த்தபோது, செல்லிடப்பேசியைக் காணவில்லை.
    இது குறித்து அவர் விஜய்ஆனந்திடம் கேட்டுள்ளார். அதற்கு, தான் செல்லிடப்பேசியை பார்க்கவில்லை என விஜய்ஆனந்த் கூறியுள்ளார்.
    இதையடுத்து அவர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாம். அப்போது, வினோத் ஆத்திரமடைந்த நிலையில் விஜய்ஆனந்தை கீழே தள்ளியுள்ளார். நிலைதடுமாறி கீழே விழுந்த விஜய்ஆனந்த் தலையில் அடிபட்டு, மயக்கமடைந்துள்ளார்.
    உடனே, அருகில் இருந்தவர்கள், 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள், விஜய்ஆனந்தை பரிசோதித்தபோது, அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர்.
    இது குறித்து வடவள்ளி போலீஸார் வழக்குப் பதிவு செய்து வினோத்தை கைது செய்துள்ளனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai