Enable Javscript for better performance
மதுக் கடையை மூடக் கோரி பாஜகவினர் உண்ணாவிரதம்- Dinamani

சுடச்சுட

    

    சோலையாறு அணைப் பகுதியில் உள்ள மதுக் கடையை மூட வலியுறுத்தி பாஜகவினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
     வால்பாறை வட்டாரத்தில் 5 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வந்த நிலையில், நீதிமன்ற உத்தரவை அடுத்து வால்பாறை நகரில் இருந்த 4 மதுக் கடைகளும் மூடப்பட்டன.
     சோலையாறு அணைப் பகுதியில் செயல்பட்டு வரும் மதுக் கடையையும் மூட வலியுறுத்தி சில தினங்களுக்கு முன்பு பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில்,  இந்த மதுக் கடையை மூட வலியுறுத்தி பாஜக ஒன்றியப் பொதுச்செயலாளர் கார்த்திக் தலைமையில் அக்கட்சியினர் செவ்வாய்கிழமை இரவு 8 மணி அளவில் உண்ணாவிரதம் இருந்தனர். இது குறித்து 2 தினங்களுக்குள் உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீஸார் தெரிவித்தனர். அதையடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai