Enable Javscript for better performance
மலை ரயிலில் இயந்திரக் கோளாறு: சுற்றுலாப் பயணிகள் தவிப்பு- Dinamani

சுடச்சுட

    

    மலை ரயிலில் இயந்திரக் கோளாறு: சுற்றுலாப் பயணிகள் தவிப்பு

    By DIN  |   Published on : 27th April 2017 06:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகை சென்ற மலை ரயிலில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக, அதில் பயணித்த சுற்றுலாப் பயணிகள் அடர்ந்த வனப் பகுதியில் சிக்கித் தவித்தனர்.
     தற்போது கோடை சீசன் தொடங்கியுள்ள நிலையில், உதகைக்கு மலை ரயிலில் செல்ல சுற்றுலாப் பயணிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில், உதகை மலை ரயில் வழக்கம்போல் மேட்டுப்பாளையத்திலிருந்து 4 பெட்டிகளுடன் புதன்கிழமை காலை 7.10க்கு உதகைக்குப் புறப்பட்டுச் சென்றது. இதில், அயல்நாட்டுப் பயணிகள் உள்பட 200-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர்.
     இந்த மலை ரயில் கல்லாறு மலைப் பாதையில் சென்றுகொண்டிருந்தபோது திடீரென இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது. இதனால், ஹில்குரோவ் ரயில் நிலையம் அருகே
    மலை ரயில் நின்றுவிட்டது. இயந்திரத்தில் ஏற்பட்ட பழுதை நீக்குவதற்காக மலை ரயில் மீண்டும் கல்லாறு ரயில் நிலையத்துக்குக் கொண்டுவரப்பட்டது.
     இதையடுத்து, மலை ரயிலில் பயணித்த சுற்றுலாப் பயணிகள் கல்லாறில் இருந்து பேருந்து மூலமாக குன்னூர், உதகைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். பழுது நீக்கப்பட்ட பின்னர் மலை ரயில் புதன்கிழமை மதியம் மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்துக்குக் கொண்டுவரப்பட்டது. மலை ரயில், மேட்டுப்பாளையத்திலிருந்து வியாழக்கிழமை காலை வழக்கம்போல உதகைக்குச் செல்லும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai