Enable Javscript for better performance
யானைகள் கணக்கெடுப்பு: வனத் துறையினருக்குப் பயிற்சி- Dinamani

சுடச்சுட

    

    அகில இந்திய அளவில் நடைபெற உள்ள ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுக்கும் பணிக்கான பயிற்சி முகாம் வால்பாறை அருகே அட்டகட்டியில் புதன்கிழமை நடைபெற்றது.
    மேற்குத் தொடர்ச்சி மலை வனப் பகுதிகளில் வசிக்கும் யானைகள் குறித்த கணக்கெடுக்கும் பணி வரும் மே 16-ஆம் தேதி தொடங்கி, மே 20-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இப்பணியில் ஈடுபடுவோருக்கான பயிற்சி முகாம் வால்பாறையை அடுத்த அட்டகட்டி வனத் துறைப் பயிற்சிமையத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
    ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குநர் கணேசன் தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில் தமிழக முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் ரகுராம்சிங் கலந்து கொண்டு பயிற்சி அளித்தார். பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்ட வன அலுவலர்கள், வனச் சரகர்கள், வனவர்கள் என 80 பேர் பங்கேற்றனர்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai