Enable Javscript for better performance
வட்டாட்சியர் அலுவலக வளாகத்தை தூய்மைப்படுத்திய விவசாயிகள்- Dinamani

சுடச்சுட

    

    வட்டாட்சியர் அலுவலக வளாகத்தை தூய்மைப்படுத்திய விவசாயிகள்

    By DIN  |   Published on : 27th April 2017 06:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தமிழக விவசாயிகள் சங்கத்தினர், பொது மக்கள் மற்றும் சூலூர் வட்டாட்சியர் அலுவலகப் பணியாளர்கள் இணைந்து வட்டாட்சியர் அலுவலக வளாகத்தைத் தூய்மைப்படுத்தினர்.
    சூலூர் வட்டாட்சியர் அலுவலக வளாகம் புதர்மண்டிக் கிடந்தது. இதனால் விஷ ஜந்துகள் நடமாட்டம் அதிக அளவில் இருப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர். அதன்பேரில், சூலூர் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தை சுத்தம் செய்யும் பணியை வட்டாட்சியர் அலுவலகப் பணியாளர்களும், தமிழக விவசாயிகள் சங்கத்தினரும், பொதுமக்களும் இணைந்து மேற்கொண்டனர். இதற்கு தமிழக விவசாயிகள் சங்கத்தின் கோவை மாவட்டத் தலைவர் சு.பழனிசாமி தலைமை வகித்தார். இப்பணிகளை சூலூர் வட்டாட்சியர் பழனி, துணை வட்டாட்சியர் சரண்யா உள்ளிட்டோர் பார்வையிட்டனர். இப்பணியில் 20-க்கும் மேற்பட்ட விவசாயிகள், அலுவலகப் பணியாளர்கள் ஈடுபட்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai